
மயக்கத்தில் கிடக்கிறான் மரணன்...
மாயவன் சொல்லும் வரை!
உறக்கத்தில் வருவது உதாரணன்!
தர்க்கத்தில் எளிதில் சிக்காதவன்!
வாவென்று சொன்னாலும் வரமாட்டான்!
வந்த பின்
போவென்று சொன்னாலும் போகமாட்டான்!
யாரென்றும் அவனுக்குத் தெரியாது
பார் அதியென்று சொன்னாலும் புரியாது!
சீரெனத் தந்தவன் உயிரைக் கேட்கின்றான்...
சட்டென்று கொண்டுபோய்ச் சேர்க்கின்றான்!
மாயனின் ஓரறிவு ஒற்றனவன்...
வேறறிவு அவனுக்கும் தேவையில்லை!
நூறறிவு நுட்பங்கள் நமக்குமில்லை....
நாயனின் சேரறிவில் சேரும் காலம் வரை!
- மு.முகமது பாட்சா*
28/04/2016
No comments:
Post a Comment