Saturday, 28 April 2018

அநாதி மரம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தகிக்கும் சூரியனை 
தண்ணீரில் முக்கிக் குளிர்விக்கிறேன், 
நிழலுலர்த்தும் மரங்கள் 
வெப்பத்தைக் குடித்துக் கொண்டிருக்க, 
பறவைகள் தஞ்சம் புகுகின்றன, 
மரத்தின் கருணையைக் கடவுளாக்கி 
நட்டக் கல்லொன்று 
குறிச் சொல்லிக் கொண்டிருக்க, 
ஆடைச் சுற்றிக் கொண்ட மரம் 
மூச்சுத் திணறலில் முகம் கருத்தது, 
கடந்து போகும் பறவைகளின் ஏக்கத்தை 
பகிர்ந்து கொள்கிறது மரம் 
தான் மட்டும் அநாதையென்று !

-முகமது பாட்சா*
28/04/2017

No comments:

Post a Comment

Popular Posts