
ஐந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுகளையும்
பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் கொடுத்த
கண்ணம்மா கிழவி
பேரனின் தலையைத் தடவிக்கொண்டே சொன்னாள்
என் பொணத்தை எடுக்க
யாருகிட்டேயும் கையேந்திடாதே!
சரியென்றழுத
பேரனின் கண்ணீருக்கு மட்டுமேத் தெரியும்
அவை எப்போதுமே செல்லாதென்று!
-மு. முகமது பாட்சா*
16 /04 /2018
No comments:
Post a Comment