Sunday, 8 April 2018

பட்டறிவு

தானியங்கு மாற்று உரை இல்லை.

படிமங்களின் நிலையில் 
படுத்துக் கிடக்கும் முதுமைக்கு 
படிகாரன் யாரென்று 
அறியாத நுரையாய்க் காற்றில் 
அடித்தே போகும் சூழலில் 
ஒட்டுறவு நானென்று 
கூட்டுறவாய் நிற்குமோ 
தொட்டுறவுக் கொண்டாடும் 
சொந்தங்கள் 
விட்டொழிந்தே போகட்டு மென்று 
தட்டழிவு நிலையில் 
தகர்ந்தேயோடும் 
பட்டறிவுப் படுத்துக்கிடக்கிறது... 
இவ்வுலகை எளிதில் 
விட்டொழிந்து போவதற்கு

- மு.முகமது பாட்சா*
08/04/2016 

No comments:

Post a Comment

Popular Posts