
தூங்கிய நிலையில்
தூங்கிய பின் தூங்கியெழும்
தூக்கத்தை யார் அறிவார்?
தூக்கிலியாய் நானும்
துவண்டுதான் கிடக்கின்றேன்
தூத்தியம் செல்ல யாரும் உண்டோ?
தூசியம் போட்டமரும்
துன்பத்தின் கூடா நட்பில்
தூக்குணியாக வாழுகின்றேன்
துருமம் தீர்ப்பாயா...
தும்பின் மௌன துத்தியமே
- முகமது பாட்சா*
11/04/2016
.
(தூக்கிலி - அறிவற்றவன்,தூத்தியம் - தூதுத்துவம்,
தூசியம் - கூடாரம், தூக்குணி - மானமில்லாதவன்,
துருமம் - மனவேதனை, தும்பு - குற்றம்,
துத்தியம் - புகழ்ச்சி)
No comments:
Post a Comment