Saturday, 17 March 2018

நான் இரசித்த கவிதைகள் - 114

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குளோஸ் அப் மற்றும் உரை


(சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த மனைவியைக் 
கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்குக் காணக் கிடைத்தது)

சனிக்கிழமை சந்தைக்கு 
வந்திருந்தாய் நீ 
கைக்குழைந்தையை இடுப்பில் சுமந்தபட 
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு 
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு 
அவரை, வெண்டி, நெத்திலி 
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் 
பை நிறைய வாங்கிக்கொண்டு 
நீ செல்கையில் 
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து 
உன் பின்னாலேயே வந்தேன் நானும் 
நீ காணவில்லை 
பொருட்களை வாங்கும் வரைக்கும் 
கைக்குழந்தையை வைத்திருக்கட்டுமா? 
இல்லாவிட்டால் காய் கறிப் பையை 
தூக்கிக் கொள்ளட்டுமா? 
நீ மிகவும் சிரமப் படுகிறாய்' என 
கூறவேண்டுமெனத் தோன்றிய போதும் 
கூறிவிட இயலவில்லை என்னால்!

கவிதை : கவிஞர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி(சிங்களம்)

தமிழில் எம்.ரிஷான் ஷெரிஃப்

நன்றி:Tamilauthorscom

No comments:

Post a Comment

Popular Posts