Saturday, 17 March 2018

கடவுள்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஒரு கடவுள் 
மற்றொரு கடவுளின் 
வீதியில் வந்த போதுதான் 
சண்டை மூண்டது

கற்களால் 
அடித்துக் கொண்டார்கள் 
காயம் பட்டவர்கள் 
துடித்துக் கொண்டிருந்தார்கள், 

காவல்துறை 
கடவுள்களுக்கு 
பாதுகாப்பாக நின்றது, 

கடவுள்கள் மட்டுமே 
காயமேயில்லாமல் 
சிரித்துக் கொண்டிருந்தார்கள், 

கடவுளுக்காகவே ஒருவன் 
தன் காயத்தை விட்டிருந்தான், 

அடிபட்டவர்களும் 
கடவுள்களின் பெயர்களைத்தான் 
அழுகையோடு 
உச்சரித்துக் கொண்டிருந்தார்கள், 

காயத்தை விட்டவன் 
வீட்டில் மட்டும் 
கடவுளை வீதியில் வைத்து 
உடைத்துக் கொண்டிருந்தார்கள், 

"நீ கடவுளேயில்லை!" 

- மு.முகமதுபாட்சா*
17/03/2017

No comments:

Post a Comment

Popular Posts