Wednesday, 28 March 2018

புள்ளிகள்.....

தானியங்கு மாற்று உரை இல்லை.

அந்தக் கவிதையின் 
கடைசி முனை வரைச் சென்றவன்
அங்கிருந்த 
5  புள்ளிகளில் விக்கித்து நிற்கிறேன்
அதன் ஆறாவது புள்ளி 
என்னவாகயிருக்கும் என்பதுதான்
என் இப்போதைய யோசனை....
தொடரும் என்பதற்குக் கூட 
நான்கு புள்ளிகள்  போதும்  
அந்த ஐந்தாவதில் 
அவன் என்ன சிந்தித்திருப்பான்?
ஏதேனும் கெட்ட வார்த்தையை
இறைத்துவிட்டுச் சென்றிருப்பானோ?
புள்ளிகளை 
புள்ளிகளாக மட்டுமே பார்ப்பவர்கள் 
பாக்கியவான்கள். 
புள்ளிகள் என் மண்டையில்
புழுக்களாக ஓடுகின்றன...
புள்ளியிட்டு கோலம் போடுகிறவள்
கணக்கை நேர் செய்கிறாள்,
வாசல் இப்போது வரவேற்பறையாகிறது,
புள்ளிகளை 
அழித்துவிட்டு கவிதையைப் படிக்கிறேன்
முழுமை பெறாத அந்தக் கவிதை
கவிஞனோடு
இன்னமும் அங்கேயே நிற்கிறது.

- மு.முகமது பாட்சா*
28 /03 /2018




No comments:

Post a Comment

Popular Posts