சாத்தான்
சாக்கடையில் விழுந்துவிட்டதாக
சொன்னார்கள்,
தேவ தூதர்கள்
அவனைக் காப்பாற்றி
கரையில் உட்கார்த்தி வைத்தார்கள்,
வழிப்போக்கன்
காரணம் கேட்டான்,
சாத்தான் இறந்துவிட்டால்
தேவதூதர்களுக்கு
வேலையில்லையென்ற
விதியிருக்கிறதாம்.
- மு.முகமதுபாட்சா*
11/03/2017

திக்ருகளின் தியானத்தில்
தஸ்பீ உருட்டும்
அந்தப் பழுத்த கிழத்திற்கு
நான் என்பதே பிடிக்கவில்லை
நாளை என்பதும் இல்லையென்றே
அடித்துச் சொல்கிறது
நிழற்படத்தைக் காட்டி
இதோ நான் என்கிறேன்
சிரித்துவிட்டு
இது உன் நிழலின் பிரதி என்கிறது
ஆடியின் பிரதியும் - என்
அசல் முகம் இல்லையாம்
முடிந்தால்
நீயே உன்னைப் பார் என்கிறது
என் சப்தங்கள் பொய்யா?
சருகளின் ஓசை கூட சப்தம்தானாம்
கிள்ளிப் பார்த்துவிட்டு
வலிக்கிறதே என்றேன்
உணர்வுகளின் உச்சக் கூட்டல்
நீ செத்துப் பார்
வலிக்காதென்கிறது அந்தக் கிழம்
அது அப்படியே தஸ்பீயை
உருட்டிக் கொண்டிருக்கட்டும்
நான்- என்
வேலைகளைப் பார்க்கவேண்டும்
- மு.முகமதுபாட்சா*
11/03/2016

தீவுக்குள்
தீவாய் வாழும் மனிதர்களிடம்
தேசியம் பேசியவன் களைத்துப் போனான்,
அவன் காதுகளில்
பூக்களை வைத்து ஆடவிட்டு ரசித்தார்கள்
போராடிக் கொண்டிருந்தவர்களின் தலையில்
கோமாளி தொப்பிகள் முளைத்தன
உதிரம் சிந்தி வீழ்ந்து கிடந்த கோமாளிகளை
வேடிக்கை பார்த்துக் கடந்து சென்றவர்கள்,
அட்சயபாத்திரம்
தருவதாகச் சொன்னவனை
அரசனாக்கிப் பார்த்தார்கள்...
அட்சயபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது
அமுது மட்டும் சுரக்கவேயில்லை
ஆடுகின்ற கூத்தாடிகளுக்கு
கால்கள் என்றும் சும்மா இருப்பது கிடையாது,
மீண்டும் அவர்களுக்காக ஆடுகிறார்கள்
தீவுக்குள் தீவாய் இருப்பவர்கள்
மீண்டும் இப்போதும்
வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்
- மு.முகமதுபாட்சா*
11/03/2017
சாக்கடையில் விழுந்துவிட்டதாக
சொன்னார்கள்,
தேவ தூதர்கள்
அவனைக் காப்பாற்றி
கரையில் உட்கார்த்தி வைத்தார்கள்,
வழிப்போக்கன்
காரணம் கேட்டான்,
சாத்தான் இறந்துவிட்டால்
தேவதூதர்களுக்கு
வேலையில்லையென்ற
விதியிருக்கிறதாம்.
- மு.முகமதுபாட்சா*
11/03/2017

திக்ருகளின் தியானத்தில்
தஸ்பீ உருட்டும்
அந்தப் பழுத்த கிழத்திற்கு
நான் என்பதே பிடிக்கவில்லை
நாளை என்பதும் இல்லையென்றே
அடித்துச் சொல்கிறது
நிழற்படத்தைக் காட்டி
இதோ நான் என்கிறேன்
சிரித்துவிட்டு
இது உன் நிழலின் பிரதி என்கிறது
ஆடியின் பிரதியும் - என்
அசல் முகம் இல்லையாம்
முடிந்தால்
நீயே உன்னைப் பார் என்கிறது
என் சப்தங்கள் பொய்யா?
சருகளின் ஓசை கூட சப்தம்தானாம்
கிள்ளிப் பார்த்துவிட்டு
வலிக்கிறதே என்றேன்
உணர்வுகளின் உச்சக் கூட்டல்
நீ செத்துப் பார்
வலிக்காதென்கிறது அந்தக் கிழம்
அது அப்படியே தஸ்பீயை
உருட்டிக் கொண்டிருக்கட்டும்
நான்- என்
வேலைகளைப் பார்க்கவேண்டும்
- மு.முகமதுபாட்சா*
11/03/2016

தீவுக்குள்
தீவாய் வாழும் மனிதர்களிடம்
தேசியம் பேசியவன் களைத்துப் போனான்,
அவன் காதுகளில்
பூக்களை வைத்து ஆடவிட்டு ரசித்தார்கள்
போராடிக் கொண்டிருந்தவர்களின் தலையில்
கோமாளி தொப்பிகள் முளைத்தன
உதிரம் சிந்தி வீழ்ந்து கிடந்த கோமாளிகளை
வேடிக்கை பார்த்துக் கடந்து சென்றவர்கள்,
அட்சயபாத்திரம்
தருவதாகச் சொன்னவனை
அரசனாக்கிப் பார்த்தார்கள்...
அட்சயபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது
அமுது மட்டும் சுரக்கவேயில்லை
ஆடுகின்ற கூத்தாடிகளுக்கு
கால்கள் என்றும் சும்மா இருப்பது கிடையாது,
மீண்டும் அவர்களுக்காக ஆடுகிறார்கள்
தீவுக்குள் தீவாய் இருப்பவர்கள்
மீண்டும் இப்போதும்
வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்
- மு.முகமதுபாட்சா*
11/03/2017
No comments:
Post a Comment