Friday, 2 March 2018

இலக்கியத் திரட்டு

தானியங்கு மாற்று உரை இல்லை.


இலக்கியத்  திரட்டு (2) 

முட்டிப் பார்க்கிறேன் 
முடியவில்லை... 
என்னை நானே 
தட்டிப் பார்க்கிறேன் 
தகரவில்லை.... 
காமத்தின் 
உச்சக் கூட்டினால் 
உளறிப் பார்க்கிறேன் 
உதவவில்லை... 
பாழும் என் 
காதல் நோய் அறியாமல் 
காமம் கூட்டும் 
காற்றுக்கும் 
தூங்கும் பாழ் ஊருக்கும்! 

மு.முகமது பாட்சா* 

இலக்கியம். 

முட்டுவென் கொல்? தாக்குவென் கொல்? 
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு 
ஆ அ அல் எனக் கூவு வேன் கொல் 
அலமரல் அசைவளி அலைப்ப, என் 
உயவு நோய் அறியாது, துஞ்சும் உயிர்க்கே

(குறுந்தொகை : 28 - ஒளவையார்)

No comments:

Post a Comment

Popular Posts