Monday, 12 March 2018

நிலா - கவிதைகள்

நிலா க்கான பட முடிவு

நிலா
வாட்டத்தில் நடக்கிறாள்
வற்றிய நதி!

சிரிக்காதே
சிதறுகிறது வெள்ளிப் பூக்கள்
வானத்தில் என் நிலா!

நிலா கவிதைகளை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அருகினில் நிலா !

பகலில் பதுங்கியவள்
இரவில் எட்டிபார்க்கிறாள்
வா நிலா !

இரவை
துடைக்கிறது
நிலா!


- மு.முகமது பாட்சா*
12/03/2018

No comments:

Post a Comment

Popular Posts