இலக்கியத் திரட்டு

சுவையென்றான் இதழை
சுவைத்தேன்!
அரும் பசிக்காரி யானும்
உருப்பசியாய் மாறி ரசித்தேன்
தேகன் அணைப்பின்
தெவிட்டா மயக்க இளம் சூட்டில்
தாகம் குளிர்ந்தேன்...
நீண்டதொரு பாறையின்
உச்சம் தொட்டுக் கட்டிய கூட்டில்
கூதளி மரம்
உரசியே விழுந்திட்ட ஓட்டையில்
வழிந்திட்டத் தேனைச் சுவைக் கூட்டி
ருசித்திட்ட முடவன் போல்
களித்திட்டேன் அவனை யான்!
தேகத்தின் சுவைத் தீரும் முன்
சேர்வானோ என் தோழி?
-
- மு.முகமதுபாட்சா*
சங்க இலக்கியம்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
.
குறுந்தொகை (பரணர்)

சுவையென்றான் இதழை
சுவைத்தேன்!
அரும் பசிக்காரி யானும்
உருப்பசியாய் மாறி ரசித்தேன்
தேகன் அணைப்பின்
தெவிட்டா மயக்க இளம் சூட்டில்
தாகம் குளிர்ந்தேன்...
நீண்டதொரு பாறையின்
உச்சம் தொட்டுக் கட்டிய கூட்டில்
கூதளி மரம்
உரசியே விழுந்திட்ட ஓட்டையில்
வழிந்திட்டத் தேனைச் சுவைக் கூட்டி
ருசித்திட்ட முடவன் போல்
களித்திட்டேன் அவனை யான்!
தேகத்தின் சுவைத் தீரும் முன்
சேர்வானோ என் தோழி?
-
- மு.முகமதுபாட்சா*
சங்க இலக்கியம்
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.
.
குறுந்தொகை (பரணர்)
No comments:
Post a Comment