
கத்தியின் ஆழுமளவில் வேகம் கணக்கிட்டீர்கள்
நடுக்கத்தை அளவிடக் கருவியில்லையா?
பூனையின் கண்களில் எப்போதும்
எலிகள் ஓடிக் கொண்டேயிருப்பதில்லை,
கோபத்தைத் துளி துளியாக அருந்துங்கள்....
தந்திரத்தை எதிரிகள் அப்படித்தான் அருந்துகிறார்கள்,
ஓட்டைப் படகிலும் பயணம் செய்யலாம்
நீந்துவோம் என்ற நம்பிக்கையிருந்தால்,
கிழிந்து பறப்பது காலண்டரின் திகதிகள் மட்டுமே
கடந்த காலத்தின் நினைவுகள் கிடையாது...
வாளின் முனையை தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டும்
இல்லையென்றால் துரு பிடித்து உடைந்துவிடும்
கனவுகள் என்றும் நிஜங்களாகாது
நிஜங்களைக் கனவுகளாக மாற்றிக் கொள்ளாதீர்கள்,
வீரியம் நெஞ்சிலிருந்தால்தான்
சதைப் பிடிப்பில் உரம் வந்து உட்கார்ந்து கொள்ளும்,
விரல்களை மடக்கியே வைத்திருங்கள்
அடுத்தக் குத்து நமதாகத்தான் இருக்க வேண்டும்
- மு.முகமது பாட்சா*
25/03/2018
No comments:
Post a Comment