Thursday, 15 March 2018

இல்லாதவொன்றில் ஏதோ இருக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள் மற்றும் உட்புறம்


இல்லாத ஒன்றில் 
ஏதாவதொன்று இருக்கத்தான் செய்கிறது, 
இல்லையென்பதுதான் 
உண்மையில் இல்லாதது, 
இருப்பதாக நினைப்பதும் 
சில நேரம் இல்லாமல் போய்விடுகிறது, 
உயிரென்பதை எப்படிக் காண்பது? 
மெய்யெழுத்துகள் ,காற்றில்தான் 
கவிதைகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன , 
அப்படியென்றால், 
உயிரெழுத்துகள் காற்றாகத்தான் இருக்க முடியும், 
காற்றைத்தான் காண முடிவதில்லையே? 
அந்த இல்லாதொன்று பிரிந்ததும் 
இருக்கின்றவொன்றும் 
இல்லாமல் போய்விடுகின்றது... 
வெறுமை 
நிசப்தம் 
மௌனம் 
இவையெல்லாமே 
இல்லாதொன்றாகத்தான் இருக்கின்றது.... 
ஆனால் ஏதோவொன்று அங்கே இருக்கின்றது.. 
இல்லையென்றால் 
விளைவுகளை அவை விதைக்கமுடியாது, 
நான் நம்புகிறேன்... 
இல்லாத ஒன்றில் 
ஏதாவதொன்று இருக்கத்தான் செய்கிறது !

 - மு.முகமதுபாட்சா
15/03/2017

No comments:

Post a Comment

Popular Posts