Thursday, 29 March 2018

பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தாடி

யூதாஸ் கரியோத்தின் கைகளில்
பாவத்தின் சம்பளம் 
30  வெள்ளிக் காசுகள்

கைத்சமனித் தோட்டம் கண்கலங்கியது
பாவத்தின் படிமம் நிரப்பப்பட்டதால்

பாவத்தின் சம்பளம் அச்சமாகிறது
பேதுருவின் மூன்று முறை மறுப்பால்

பிலாத்துவின் பாவத்தைத் 
தண்ணீர் விழுங்கியது
கைகளை மூன்றுமுறை கழுவியதால்

சீமோனின் பாவத்தையும் 
சிலுவை ஏற்றது சுமக்க உதவியதால்

வெரோணிக்காவின் பாவம் 
துடைக்கப்பட்டது  
கைத்துண்டு வெளிச்சம் பெற்றதால்

சிலுவையில் ஏற்றப்பட்ட குரல் மட்டும் 
எப்போதும்  அழுகிறது
பாவத்தைக் கழுவுங்கள்.

- மு.முகமது பாட்சா*
30/03/2018

No comments:

Post a Comment

Popular Posts