
காற்றின்
திசையறியா பறவையாகத் திரிகிறேன்
என் இறகுகளின் பெருமூச்சு
வானத்தை அசைக்கிறது,
தொலைந்து போன சப்தங்கள் கூடமைத்து
அசுரக் குஞ்சுகளைப் பொறிக்கின்றன...
நிழலென்பது வானத்திற்குத் தெரியாது,
அதன் நிசப்தம்
பெரும் விசும்பலை உள்ளடக்கி உறங்குகிறது,
எங்கோ கேட்கும் ஒரு பறவையின் குரல்
என் கடந்த காலத்தின் பிரதியாகவே ஒலிக்கிறது....
உள்ளமென்பது உறுதியில்லாததால்
உயரம் என்பது பள்ளத்தில் கிடக்கிறது,
வல்லூறுகள் இல்லாத வானம்
அர்த்தமற்றுப் போகிறது,
எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்..
மீண்டும் நான் திசையறிந்து பறப்பதற்கு.
- மு.முகமது பாட்சா*
19 /03 /2018
No comments:
Post a Comment