Friday, 23 March 2018

எதுவும் அறியாமல்



அலைப்பேசியின் கோபுரத்தில் 
உட்கார்ந்திருக்கிறது நிலா
ஆந்தையின் கண்கள் 
மிரட்சியுடன் பார்க்கின்றன
சட்டைக் கிழிந்த யாசகன் 
என்னைத் தொட்டுவிட்டு சிரிக்கிறான்
கனகாம்பரம் சூடியவள் 
கிராக்கி படிய வேண்டிக் கொள்கிறாள்
சல்லாபம் செய்யும் நடைவாசிகளுக்கு 
வீடுகள் இல்லை
ஒரு நாய் அழுகிறது
பூனை நடையோடு ஒருவன் பதுங்குகிறான்
அசதியிலுறங்கும் முலையில்
அழுக்கான குழந்தை பால் குடிக்கிறது
கோவில் நடை சாத்தப் பட்டிருக்கிறது
தெருவோரத்து சாமி 
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
டாணாக்காரரின் விசில் 
களவாணிகளை உஷார் செய்கிறது...
மாடியில் எரியும் வீட்டில்
வயசுக்காரி சோரம் போயிருக்கலாம்
வாகனங்கள் எதையும் அறியாமல்
வேகமாகவே கடக்கின்றன
அவள் மட்டும் இன்னமும் வரவில்லை
விடிந்தால்தான் தெரியும்
என் பிணம் எங்கே ஒதுங்குகிறதென்று.

- மு.முகமது பாட்சா*


23/03/2018

No comments:

Post a Comment

Popular Posts