
வெற்றிக் கதைகளைத் தேடி
களைத்துப் போன என்னிடம்
சொல்கிறது அந்தப் பட்சி....
தோல்வியின் முதுகில்
உட்கார்ந்துப் போகிறதாம் வெற்றி...
தெற்றிக் கதைப் பேசாதே
தொற்றிக் கொள்ளென்று...
தொற்றித் தொடர
எத்தனிக்கும் தருணங்களில்
பற்றி வரும் உறவுகளெல்லாம்
பாழும் காலிழுக்கிறது...
மெத்தனித்த தருணங்களை
மீட்டெடுக்க முடியாமல்
தத்தளிக்கும் மூச்சிரைப்பில்
இன்னமும் ஒட்டியே தொடருது
வீழ்ந்திடாத நம்பிக்கைகள்!
- மு.முகமது பாட்சா*
17/03/2016
No comments:
Post a Comment