Monday, 26 March 2018

மக்களின் மந்திரிகளில்லை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: மலை, வானம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

உழவர்களெல்லாம் 
போராட்டத்தை 
உழுது கொண்டிருக்க, 
பூமியின் கருப்பையை அகற்ற 
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 
கருவேல மரங்களை 
அகற்றிக் கொண்டிருக்கிறோம், 
மரங்களை நடுவதற்கா? 
என்று கேட்டு விடாதீர்கள், 
மலடி வயிற்றின் மேல் 
மண்டபம் கட்டுவதற்காகத்தான்! 
திருமணம் நடக்குமா? 
என்றும் கேட்டு விடாதீர்கள், 
உழவர்களின் ஒப்பாரிகளை 
சிறை வைப்பதற்காகத்தான்! 
ஜந்தர்மந்தர் வீதியில் செல்லும் 
அமைச்சர்களின் கார்களுக்கு 
கும்பிடு போட்டு விடாதீர்கள் 
அவர்கள் சாப்பிடுவது 
உழவர்களின் உணவுமில்லை! 
அவர்கள்
மக்களின் மந்திரிகளுமில்லை !

- மு.முகமது பாட்சா*
27/03/2017

No comments:

Post a Comment

Popular Posts