
மெளனத்தின் வெளியில்
சின்னக் கீறல் போட்டுப் போகும்
கருவண்டின் திசுக்களில்
கலந்திருக்கும்
உன் அடர்ந்த ஆதிக்க உயிர்மிகள்
நம்மின் ஆதிக் காதலை
உயிர்ப்பித்துப் பறக்கின்றது...
உறங்க மறுக்கும் விழிகளுக்குள்ளும்
நழுவ மறுக்கும் தூசிகளாய்!
.
சற்றேனும் அடங்கிக் கிடந்தால்
தொடர்வேன் மெளனத்தை!
.
- மு.முகமது பாட்சா*
30/03/2016
No comments:
Post a Comment