
இரவு வானம்
இருட்டாகத்தான் இருக்கும் என்பது
என்ன நியதி?
நட்சத்திரங்கள், சூரியனை வாங்கி
வெளிச்சம்
காட்டி கொண்டிருக்கின்றன
நான் கூட ஒரு கவிஞன்தான்
என்னிடம் ஜுப்பாவும்
ஜோல்னாப்பையும் இருந்ததே கிடையாது ,
என் மகன் ஆண்ட்ராய்டில்
எதையோ எழுதிக் கொண்டே
தானும் கவிஞன் என்கிறான்,
நம்பித்தானே ஆகவேண்டும்...
என்னை நானே நம்பவில்லையென்றால்?
நம்பிக்கையில் உட்கார்ந்து கொண்டு
நம்பிக்கையிழந்துவிட்டதாகச் சொல்வது
நாம் மட்டுமாகவே இருக்கமுடியும்!
புன்னகைப்பதும், அழுவதும் கூட
ஒரு நம்பிக்கைதான்...
கறுப்பு கண்ணடியை கழற்றிவிட்டு
இரவைப் பார்ப்போம்,
இல்லையென்றால் பகல்கள் கூட
இரவுகளாகத்தான் தெரியும் !
ஏனென்றால்,
இரவையே நாம்
இருட்டென்றுதான் படித்து வருகிறோம் !
- மு.முகமதுபாட்சா*
13/03/2018
No comments:
Post a Comment