Thursday, 15 March 2018

அவர்கள் நம் வீட்டில் இருக்கிறார்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கனவுகளுக்குள் வாழ்வதே 
நமக்குப் பழகிவிட்டது, 
அப்படித்தான் பழக்கியும் விட்டார்கள்... 
கனவுகளை உதறியெழுந்தால் 
தடுப்புகள் முட்டுகின்றன, 
நாம் குனிந்தே இருந்தால்தான் 
நிமிர்ந்து கிடந்தவர்கள் 
குனியாமல் இருக்கமுடியுமென்பது 
இவர்களின் சித்தாந்தம் ! 
இவர்களின் நச்சரவங்கள் 
ஆங்காங்கே 
அலைந்து கொண்டே யிருக்கின்றன, 
கனவுகளைக் கலைத்தெழுந்தவர்கள் 
ஆங்காங்கே 
இறந்தும் கிடக்கிறார்கள், 
கேள்விகளைக் கேட்பவர்களெல்லாம் 
தேசத்தின் துரோகிகளென 
அடையாளம் காட்டப் படுகிறார்கள், 
அகிம்சையென்ற போர்வைக்குள் 
நம்மைப் போர்த்திவைப்பது 
இவர்களுக்கு எளிதாகப் போகின்றது, 
திருடர்களின் கைகளில் 
சாவிகளைக் கொடுத்துவிட்டோம், 
இப்போது நாம் சிறைகளில் இருக்கிறோம் 
அவர்கள் நம் வீட்டில் இருக்கிறார்கள் !

- மு.முகமதுபாட்சா*
14/03/2017

No comments:

Post a Comment

Popular Posts