Monday, 26 March 2018

கவிதையல்லாதவொன்று

தானியங்கு மாற்று உரை இல்லை.


கவிதையல்லாதவொன்றை 
கவிதையென்று 
சிலர் சிலாகித்துக் கிடக்க, 
கவிதையல்லாதவொன்று 
கவிதையாகவேத் தன்னை 
சிங்காரித்துக் கொள்கிறது, 
புத்தன் சிலையிருக்கும் மரமெல்லாம் 
போதிமரமென்றால், 
ஞானம் 
எங்கே போய் ஒளிந்து கொண்டது? 
கற்பனைகளுக்கு 
உயிர் கொடுத்து நடக்கவிட்டதால், 
கற்பனைகள்தான் 
நம்மை ஆட்சி செய்கின்றன, 
நகல்களுக்கு நாணைக் கட்டிவிட்டு 
நிஜங்களை நாம் 
விவாகரத்துச் செய்து விடுகிறோம்! 
நிழல்களில் மட்டுமே 
வாழ பழகிக் கொண்டவர்கள்.... 
வெயில்களை வெறுப்பதில் 
ஆச்சரியமொன்றுமில்லை !

- மு.முகமதுபாட்சா*
26/03/2018

No comments:

Post a Comment

Popular Posts