Saturday, 3 March 2018

என் நிறம் சிகப்பு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

காலின் கீழ் ஒட்டியிருக்கும் உதிரத்தை
துடைத்துக் கொண்டே
சிகப்பு என் நிறமென்று பேசிக் கொள்கிறார்கள்
துப்பாக்கியின் கட்டையை 
திருப்பிப் பிடித்துக் கொண்டு நடக்கிறது அகிம்சை
டிரிக்கரில் உட்கார்ந்திருக்கும் விரல்கள்
அதன் பாதுகாப்பிற்குத்தான் என்றால்
என் நிறம் கூட சிகப்புதான்
உக்கிரம் கருணையின் கண்களில் படரும் போது
சிகப்புதான் செங்கொடி ஏந்துகிறது
போராட்ட குணங்களே இல்லையென்றால்
எலிகளெல்லாம் எப்போதோ
பூனைகளுக்கு எளிய உணவாக மாறியிருக்கும்
அதிகாரம் என்பது
அடுத்தவன் கைகளில் அடிக்கடி மாறக்கூடியது
நீ அடித்தால் நான் அடிப்பேன் என்பது
கோபத்தின் நேர்மை
அடிப்பவன் கைகள் 
வலிக்கக் கூடாது என்பதற்காகவே 
வனையப்பட்டிருக்கிறது சாட்டையின் கைப்பிடி
புத்தனின் கண்களில் உக்கிரம் கூட்டி வரைகிறேன்
அகிம்சை புதைக்கப் பட்ட பூமியில்
என் நிறம் மட்டுமல்ல
கோபமுள்ள ஒவ்வொருவனின் நிறமுமே
இங்குச் சிகப்புதான்.

- மு. முகமது பாட்சா*
04/03/2018

No comments:

Post a Comment

Popular Posts