Thursday, 15 March 2018

பரவி கிடக்கும் வலி


தானியங்கு மாற்று உரை இல்லை.

கழுத்தில் தூளிகட்டி 
ஆடிக் கொண்டிருந்த அந்த உடலை 
இறக்கியவர்கள் சொன்னார்கள், 
இது தற்கொலையென்று... 
அந்த அறையின் வாசத்தில் 
வலி பரவி கிடந்தது, 
ஒரு சமூகத்தின் எழுச்சியை 
தற்கொலையென்ற சொல்லால் 
அடக்கம் செய்துவிட்டவர்கள், 
இறந்து போனவனைக் 
கோழையென்றே சொன்னார்கள், 
அவனது டைரியின் சில பக்கங்களை 
களவாடியவர்கள் 
அடுத்தொரு அட்டவணைத் தயாரிக்கவும் 
ஆயத்தமானார்கள், 
திட்டமிடலில் 
குற்றமில்லாமல் செய்யக் கூடியவர்கள் 
அவனது கைப்பேசியில் 
சில திருத்தங்கள் செய்து கொண்டிருக்க , 
அவன் தேசத்தின் குற்றவாளியாகவே 
மாறிக் கொண்டிருந்தான், 
கல்விக்கூடத்தின் கறை பட்ட 
அந்தச் சுவர்களில் எங்காவது 
அவனின் சிந்தனை கிறுக்கல்கள் தெரிந்தால் 
அழித்துவிடாதீர்கள் 
நாளைய வரலாற்றை 
அதுவே கூட பதிவு செய்யக் கூடும் !

- மு.முகமதுபாட்சா*
15/03/2017

No comments:

Post a Comment

Popular Posts