
'நான், அரசனானால்' போட்டிக்கு
ஆயத்தமானார்கள் மாணவர்கள்
'எதிரியை வீழ்த்துவேன்' என்று
எழுதிக் கொடுத்தான் ஒரு மாணவன்
'மதுக் குடங்களை உடைத்துவிடுவேன்'
என்றான் இன்னொருவன்
'இன உரிமைக்குப் போரிடுவேன்' என்றான்
போராளி மாணவன்
'ஆட்சிதான் முக்கியம்..
அமர்ந்தப் பின் சொல்கிறேன்' என்றான்
நான்காமவன்
ஐந்தாவதாய் வந்தவன் போதையில்
'நான்தான் இங்கு அரசன்' என்றான்
சட்டென்று நால்வரும் - தங்களின்
வசனங்களைத் திருத்திக் கொண்டார்கள்...,
"ஆலம்பனா நாங்கள்தான்..
உங்களின் அடிமை" என்று
- மு.முகமது பாட்சா*
28/03/2016
No comments:
Post a Comment