Wednesday, 21 March 2018

வலியுடன் நான்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சுடரற்ற தளத்தில் 
என் வலி நடந்து போகிறது...
தேநீர் கோப்பையின் முனையில்
உட்கார்ந்திருக்கும் கறை
என்னைப்பார்த்து சிரிக்க
ஓங்கியெறிகிறேன்
உடைந்து சிதறுகிறது மனம்...
சன்னலோரத்து கேலிப் புன்னகைகள்
காக்டஸின் உடலில் முற்களைப் பதிக்க
நிர்வாணமாக நடந்து போகிறேன்...
வலி மிகுந்த செடிகளின் மீதுதான்
பூக்கள் அமர்ந்து சிரிக்கின்றன....
முகத்தை 
கைகளால் மூடிக் கொள்கிறேன்...
பின்னலிட்ட வலிகள்
சுயக் கூடமைக்கும் 
குருவியிடம் போய் சேர்கின்றன.
வலிகளை நாராய் கிழித்து பின்னும் 
அக் கூட்டில்
நானும் போய் அமர்ந்து கொள்ள...
இப்போது நானும் குருவியும்
சூடான தேநீர் அருந்துகிறோம்.

- மு.முகமது பாட்சா*
20/03/2018

No comments:

Post a Comment

Popular Posts