
அந்தக் கடிதம்,
ஒரு போராளியின்
கடிதமாகத்தான் இருக்கமுடியும்,
எழுத்துகளெல்லாம்
உதிரம் தொட்டு எழுதப் பட்டிருந்தது,
நடு நடுவே
சில வார்த்தைகளைக் காணவில்லை,
சில எழுத்துகள் தீய்ந்து கிடந்தன,
சில வார்த்தைகளை
கண்ணீர் கரைத்திருந்தது,
கோபத்தில் சில எழுத்துகளெல்லாம்
வளைந்து நெளிந்திருந்தது,
அந்தக் கடிதம் கிடந்தவிடத்தில்
சில இரத்த நிலாக்கள் சிதறிக் கிடந்தன,
அந்தப் போராளி இங்குதான்
எங்காவது ஒளிந்திருக்கக் கூடும்....
அவ்விடம்
தொட்டடுத்த வனமாகவும் இருக்கலாம்
அல்லது
கடிதம் கால்பரப்பிக் கிடந்த
மண்ணிற்குள்ளும் இருக்கலாம் !
- மு.முகமதுபாட்சா*
12/03/2017
No comments:
Post a Comment