
கவிதைகளின்
சில பக்கங்களைக் காணவில்லை,
காவல் நிலையத்தில்
புகாரளிக்கிறேன்,
அங்கு உட்கார்ந்திருந்த
கவிதைகளைக் காட்டி
இதிலேதும் இருக்கின்றதா?
எனக் கேட்கிறார்கள்,
யார் யாரோயெழுதிய கவிதைகள்,
அம்மணமாய் உட்கார்ந்திருக்க...
அங்கு வாசலில்
கோலம் போட்டிருந்த
உதிரத் துளிகளில்
என் கவிதைகளின் வாசம் வீசுகிறது,
காவல்காரர்களின் லத்திகளில்
மிச்சம்மீதி எழுத்துகள்
பிய்ந்து கிடக்க...
நீதிதேவதை
தற்கொலை செய்து கொண்டதாக
முக்கியச் செய்திகளை
வாசித்துக் கொண்டிருந்தன
தொலைக் காட்சி செய்திகள் !
- மு.முகமது பாட்சா*
22/03/2017
No comments:
Post a Comment