
அவர்கள் காதலிப்பதாகச் சொன்னார்கள்
முகங்களின் வரிகளை
ஒருவருக்கொருவர் படித்துக் கொண்டார்கள்,
கசக்கவில்லையா? என்று கேட்டேன்
கசந்தால் அதுக் காதலில்லையென்றார்கள்,
தங்கள் முகங்களின் புன்னகை கூட
காதலில்தான் பூத்ததென்றார்கள்,
புரிதல் மட்டுமே காதல் மொழியென்றவர்கள்
பார்வைகளைப் பத்திரப் படுத்துவது
காதலுக்கும் கட்டாயம் என்றார்கள்,
மரணத்திற்குப் பின்பும் சாத்தியமா? எனக் கேட்டேன்,
சிரித்துவிட்டு
மௌனமொழியில் நாங்கள் தினமும்
பேசிக் கொள்வோம் என்றார்கள்....
அவர்களின் நடுங்கும் விரல்களைத் தொட்டுப் பார்த்தேன்,
காதலை அதுவும் பேசிக் கொண்டிருந்தது!
- நட்புடன்...முகமது பாட்சா*
02/03/2018
No comments:
Post a Comment