Saturday, 17 March 2018

மதியின் சூத்தை

தானியங்கு மாற்று உரை இல்லை.

செருக்கின் விளிம்பில் 
சிந்தனைகளை உட்கார வைத்து 
சிற்றின்பச் சூழலில் 
நினைவுகளைச் சுமந்து கொண்டு 
நானென்ற நானை நானே 
விடாமல் பிடித்துக் கொண்டும் 
தொழுகையின் விரிப்பில் 
ஏக இருப்பில் அமர்ந்து 
விரல் உருட்டும் தஸ்பீக்களிலும் 
உபதேசிக்கும் நாவிலும் மட்டுமே 
என் நாயன் அமர்ந்திருப்பானென்ற 
அகம்பாவ நச்சுக் கணக்கின் 
கூட்டல் கழித்தல்களை 
காலக் கணக்கன் 
சரியாகக் கணிக்கும் நேரத்தின் 
மகஷரின் வெப்பம் சூட்டில் 
கருகி நிற்கும் 
வீண்மதியின் கபடச் செயல்களை 
வித்தையென்பேனா? - நான் வேடமிட்ட 
மதியின் சூத்தை யென்பேனா? 

- மு. முகமது பாட்சா*
18/03/2016

No comments:

Post a Comment

Popular Posts