Friday, 2 March 2018

அச்சுப்பிழை

தொடர்புடைய படம்

பதிப்பகத்தின் வாசலில் 
நின்று கொண்டிருக்கிறது  எழுத்துகள்
வந்தவர்களும் போனவர்களும்
புன்னகையை போட்டுவிட்டுப் போனார்கள்
'ஆடி' மகிழுந்து அசைந்து நிற்க
காக்கிச் சட்டையொன்று
மூக்குக் கண்ணாடிக்கு கதவைத் திறந்துவிட்டது
எழுத்துகளை எட்டிப்பார்த்த கண்ணாடி
சட்டையேன் போடவில்லை என்றது
வேட்டிக் கட்டியிருப்பதை உறுதி செய்தன
எழுத்துகளின் கைகள்...
கதையெதுவும் சரியில்லையே - இது கண்ணாடி
வாசலில் நின்ற வெட்கத்திற்காக
கவிதைகள் 
தலைகுனிந்து  வெளியேறும் போது
வாசலில் பதிப்பகத்தின் பெயர் 
அச்சுப் பிழையாகவே இருந்தது

- மு.முகமது பாட்சா*
03 /03 /2018

No comments:

Post a Comment

Popular Posts