Monday, 19 March 2018

குருவிகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

ஜன்னலின் ஓரம் 
எட்டிப் பார்த்துப் போகும்... 
முற்றத்து மூலையில் 
கட்டிய கூட்டில் 
முறுவலாய்ப் பார்க்கும்
சிந்திய உணவுகளை 
சிதறாமலெடுத்து 
தத்தி நடைப் போட்டு 
தத்துவங்கள் சொல்லும்... 
ஒற்றை நிமிடம் ஓரிடத்தில் 
நில்லாமல் பறக்கும் 
அப்பத்தாக் கோபத்தை 
அடிக்கடிக் கூட்டும் 
ஒட்டடை அடிக்கும் போதும் 
கருணையில் தப்பிக்கும் 
இனப் படுகொலைகள் 
இயல்பாய்ப் போனதால் 
கானக் குருவிகளை 
காணாக் குருவிகளாக்கி 
எட்டுக்கு எட்டில் 
இப்போது 
எலி வாழ்க்கை வாழ்கிறோம்... 

- மு.முகமதுபாட்சா*
20/03/2016 

நன்றி : ஓவியம் 'பொன்வண்ணன்' அவர்கள்

No comments:

Post a Comment

Popular Posts