Monday, 5 March 2018

இலக்கியத் திரட்டு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

இலக்கியத் திரட்டு 

இணையின் சூட்டில் 
இயக்கிய மாரனும் 
பிரிந்துப் போகான் 
என நான் புரிந்திருந்தேன்! 
பிரிந்தாள் 
மனம் தளர்ந்துப் போவேன் என 
அவனும் மறந்துவிட்டான்! 
காதலின் கர்வத்தை 
கழற்றவே 
பிரித்ததோ இக் கொடும் காலம்? 
காதல் 
அரவத்தின் கொடு வாயில் 
சிக்கியச் சின்ன மீன் இவளை 
சிந்தனை வலிக் கண்டு 
மீட்பானோ ? மீள்வானோ ! 
வேதனைச் சூளில் 
தினம் வேகும் என் காதலன்! 

- மு.முகமதுபாட்சா* 

சங்க இலக்கியம் 

செல்வா ரல்லரென் றியானிகழ்ந் தனனே 
ஒல்வா ளல்லளென் றவரிகழ்ந் தனரே 
ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் 
நல்லராக் கதுவி யாங்கென் 
அல்ல னெஞ்ச மலமலக் குறுமே. 

குறுந்தொகை..(ஔவையார்)

No comments:

Post a Comment

Popular Posts