Monday, 26 March 2018

இராவண மாடசாமி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அகடம் தரித்தக் கபடனாய் அரிதாரம் பூசி
வாஞ்சையின் மகளுக்காய் 
துச்சாதனத் துயிலுரிந்த போதும்
மாரீசனாய் மானுடையுடுத்தி மாண்ட போதும்
ராஜபார்ட் கிடைக்காத சோகம்
கைப்பட்டோடைகளாய் காற்றிலாட
தத்தோம் தை தரிகிடத் தோம் என்று
ஜதிக்கட்டும் காலின் சலங்கைகளின் சிதறலில்
தொட்டால் பற்றும் தீயாய் சுழலும்
இராவண மாடசாமியின் முற்றத்தில்
காலொடிந்து நிற்கும் கட்டிலில் படுத்திருக்கிறாள்
தெருக் கூத்தின் யெவனவழகி....
கோவிலின் வாசலில் அவனைக் கண்டால்
சொல்லிவிடுங்கள்
அவள் பிழைப்பது மிகவும் கடினமென்று.

(இன்று உலக நாடக தினம்)

- மு.முகமது பாட்சா*
27 /03 /2018 

No comments:

Post a Comment

Popular Posts