Monday, 9 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 75

 பரீட்சன் க்கான பட முடிவு

காலம் கடுகு

இலட்சக்கணக்கான குறுனல் மணிகள்
ஒரே பிடியில் அள்ளி வீசப்படும்
இரைக்கு காத்திருந்த குஞ்சுகள்
சிமிட்டலுக்குள் 
எம்பட்டதை 
கொத்திக்கொள்ளும்

பிற்சமயம் ருசி பகர்கையில் என் விரல் இடுக்கில் கிடந்ததுதானே அது 
என் சொண்டிலிந்து தவறியது தானே இது என்றும்
புலம்புவது ஒன்றும் புதிதல்ல

என்னதான்
கைசேதப்பட்டாலும் எறிந்தவன் பிடிக்குள் மட்டுமே 
எல்லாம் ஒன்றாய் ஓர்மித்து இருக்கும் 
கலைந்த பின் 
வாய்த்தது மட்டுமே சிக்கும்
சிக்கியது மட்டுமே சித்திரமாகும்

காலம் காத்திருப்பதில்லை
குறை எதிலுமில்லை துல்லிய கணத்தில் முழித்தூண்டலில் சிக்கியதே
என்னுடையது
என்று திருப்தி கொள்வதே ஓவியத்துக்கு ஓசை தரும் 
இல்லாவிடின் ஓலந்தான் மிஞ்சும்

நொடிக்கு பல் கோடி நிகழ்வுகள்
எவரும் காணாமலே கழிந்தும் விடலாம் 
கண்டபின்னும் இன்னும் சில கோடிகள் 
சிமிட்டலுக்குள் தொலைந்தும் 
விடலாம் 
காலம் கடுகு

சிக்கியதை வைத்துசித்திரம் வரைந்தால் சிந்திய கவலை நிச்சயம் கலையும்
நாளைய நொடிகள் எனக்கு மட்டுமாயினும் அசையாமல் நிற்கலாம்! ஏகபோகமாகமாய்.

கவிஞர் பரீட்சன் - இலங்கை

(அரசியல் நுழைவின் காரணமாக இவரது கவிதைகள்
தேங்கி கிடப்பதுதான் வருத்தமளிக்கிறது)

No comments:

Post a Comment

Popular Posts