
எத்தையாவதொன்றை எப்போதும்
பேசிக் கொண்டேயிருக்கிறேன்
தேவையில்லாத வார்த்தைகளும்
தேவையான ஒன்றாய்
காற்றில் கலந்து விடுகின்றன
போதி மரத்து வார்த்தைகளெல்லாம்
நிர்வாணம் தேடியலைகின்றன
ஆசையின் வார்த்தைகளால்
விழிகளின் தவம் கலைந்து
வீதியில் செல்கின்றேன்
செங்கோலோச்சும் வார்த்தைகளால்
அரசனாகிப் போகிறேன்
மமதை வார்த்தைகளென்ன
களவாடிச் சென்று காரி துப்புகின்றன
பரிதாப வார்த்தைகளெல்லாம்
பார்த்து விட்டுப் போகின்றது
பாவத்தின் வார்த்தைகள்
சிலுவைகளைச் செய்து கொண்டிருக்க
வஞ்சகத்தின் வார்த்தைகள்
பள்ளம் தோண்டிக் கொண்டிருக்கின்றன
புதைத்த இடத்தில் மிச்சமாய் இருந்தது
இந்த ஒரு வார்த்தை மட்டும்தான்
'இவன் வார்த்தைகளால் இறந்தவன்'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment