Tuesday, 24 October 2017

அரசியல்



POLITICS PAINTING க்கான பட முடிவு

வெள்ளைச் சட்டைகளும், வெள்ளை வேட்டிகளும் 
அடையாளங்களாகிப் போயின , 
துண்டுகள் மட்டும் நிறம் மாறிக் கொள்கின்றது  
வஞ்சனை நிறத்தில் எழுது கோல், 
குறிப்பிட்ட வண்டிகள்தான் பாராக்கள், 
அடியாட்களின் அசால்ட்டான மிரட்டல்கள் , 
கைப் புழங்கும் தொழிலதிபர்களின் பணங்கள் , 
மாநாட்டுச் செலவுகள் , மகிழ்விக்கும் பானங்கள், 
சாதிகளைத் தூண்டிவிட்டு ,நரித் தந்திரங்கள், 
மதங்களைத் தூண்டிவிட்டு, குருதியில் பொட்டுகள், 
காவல்துறை விலைபோக இரகசிய உளவுகள் , 
நெளிவான பேச்சுகள், நெகிழ்வான நடிப்புகள், 
தொழிலொன்றுமில்லை, கோடியில் சொத்துகள், 
நிதிக் கேட்டு உண்டியல் நாடகம், 
அரசியலொன்றும், அத்தனை சுலபமில்லை , 
சொல்லுங்கள் அரசியல் என்ன சாக்கடையா ? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts