Sunday, 15 October 2017

தேடி...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

காற்று வேர்களைத் தேடி செல்கிறது 
வேறுவழியில்லாமல் இறைஞ்சுகின்றன மரங்கள் 
மேகங்களின் ஊர்வலம்  பாலை நிலத்தில் 
ஒட்டகங்கள் நீர் தேடியலைகின்றன 
கானல் நீர் கண்களுக்கு மட்டுமே தாகம் தீர்க்கும் 
இறந்தவன் உடலை புதைத்துக் கொண்டிருந்தார்கள் 
வேர்களையிழந்த விருட்சமொன்று 
அழுது கொண்டிருந்தது சவப் பெட்டியாக
இறந்தவனும் கூட ஒரு தச்சன் 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts