
தெழியற்ற கோட்டினில்
ஓளற்று நெளிகிறது மொழியற்ற மௌனம்,
அகோரப்பசியின் நெழியனின் மூச்சுக் காற்று
சூழியின் மௌனவெளியில் மோழியோட்டுகின்றன,
பூழியாய் திசை கழலும் மௌனம்
நெசவின் நோழிகையாய் இடம் வலம் பாய,
அப்பூச்சி விளையாட்டின்
கண் அவிழா மீளிகளாய்த் திரிகிறோம்,
மௌனம் மௌனம் நோர்த்து நோக்க
புதை குழியில் புதையுமோர் ஆலமரம்
ஆங்கார் சப்தமெழுப்பி அமிழ
கூடுகள் சிதைந்து பறவைகள் பறக்கின்றன...
நானும் மௌனமும்
உறக்கம் கலைந்து உட்கார்ந்திருக்கிறோம்,
தேடாதீர்கள் சித்தார்த்தனை
யசோதரையைப் பார்க்கப் போயிருக்கிறான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment