-உடுத்தும் விவாகரத்தில்
அவிழ்த்து பார்க்கிறாய்
-உள்ளத்தின்
எண்ணங்களையும்
நீ தான்
தீர்மாணிக்கிறாய்?
-சுற்றியிருப்பது
துணிதான் என்றாலும்
உற்றுப் பார்க்கிறது
உன் காமம்!
-உரசல்களின் வெளியில்
பற்றியெரிவது
கோபமென்ற தீ தான்!
-பெண்மை என்ற
ஒற்றை வார்த்தையால்
அணைக்கப் பார்க்கிறாய்?
_பெண்மை என்ற
ஒற்றைச் சொல்லையும்
போதையென்றே
பொதுவில் வைக்கிறாய்?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment