
செத்த பிணத்தை பார்த்து
சாகும் பிணங்கள்
அழுது கொண்டிருந்தன!
- உற்றவர் அழ
உறவுகள் அழ
மற்றும், மற்றவர் அழ
செத்தவர் மட்டும் அழவேயில்லை?
- பெற்றவர் வைத்த பெயரும்
மற்றவர் வைத்த பெயரும் -
உயிர்
விட்டவருக் கில்லையாம்!
-செத்த பிணம் என்றே
சற்றைக்கொரு தரம்
சளைக்காமல் சொல்கின்றார்!
- எரிப்பாரோ? புதைப்பாரோ?
எப்படியோ என்றாலும்
உற்ற உறவென்று நிரந்தரமாய்
வீட்டில் நிலையாய் வைப்பாரோ?
-செத்த பிணத்தை
தூக்கிச் சுமக்கும்
- நாளைச் சாகும் பிணங்களே!
சற்றே அறுங்கள்
ஆசைக் கயிற்றை!
நாளை - நம்மைச் சுமப்பதும்
நாலு பிணங்களே!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment