Wednesday, 25 October 2017

இல்லை இருக்கிறது

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பறவை

இல்லையென்ற சொல்லுக்குள்தான் 
எல்லாமிருப்பதாகச் சொல்கிறார் 
அந்த சூஃபி ! 

இருப்பதென்பதெல்லாம் 
இல்லையென்றே ஆகிவிடுமாம் ! 

பிறப்பில் இருப்பது 
இறப்பில் இல்லாமல் போகிறது ! 

விதைத்த ஆசைகள் 
குவிக்கின்றன பொருள்களை, 
இறப்பிற்குப் பின்
திருப்பி எடுப்பதேயில்லை , 

தடித்த வார்த்தைகள் இருக்கின்றன,  
வெறுத்த உறவுகள் இல்லாமல் போகும் , 

இல்லையென்ற சொல்லுக்குள்தான் 
இறைவன் இருக்கிறானாம், 

இருப்பதென்பதெல்லாம் 
இல்லையென்றே 
சொல்லிவிட்டுப் போகிறார் 
அந்த சூஃபி ! 

- மு.முகமதுபாட்சா

No comments:

Post a Comment

Popular Posts