Tuesday, 24 October 2017

சூனிய ஞானம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

ஞானவெளியென்பது 
சூனியமாகிறது 
ஒற்றையிலை உதிர்வதில் 
ஒராயிரம் தத்துவங்கள் 
உள்ளீடாகின்றன 
போதிமரத்தூறும் எறும்புகள் 
நாளையைச் சேமிக்கின்றன 
இல்லாதவொன்றிற்கு 
மௌனமென்று பெயரிடுகிறார்கள் 
வார்த்தைகளில் சேராமல் 
எழுத்துகள் 
இரைந்து கிடக்கின்றன 
சேர்ந்தவையெல்லாம் 
வாயாடிக் கொண்டு திரிகின்றது 
ஆலயங்களின் வாசல்களில் 
ஆசைகள் 
இரைந்து கிடக்கின்றன 
அட்டைப் படக் கடவுளுக்கு 
கரையான் அரிப்பது 
அறவே தெரியவில்லை 
நிழலை விரித்து 
நிஜங்கள் படுத்திருக்கின்றன 
இரவும் பகலும் 
வயதை உண்ணுகின்றன 
நான் எனது 
எங்குப் பார்த்தாலும் அலைகிறது 
காலொடிந்த பிறகு 
நடப்பது அதிசயமாகிறது 
முதுமையில்தான் 
சூனியம் ஞானமாகிறதாம் 
பட்ட மரங்களின் வேர்களிலும் 
பச்சையம் பூசியிருக்கலாம் 
படுக்கையின் கடை சி மூச்சு 
வலிகளோடுதான் பிரிகிறது 
அடக்கம் முடிந்த பிறகும் 
சூனியம் சுற்றிச் சுற்றி வருகின்றன 
இதுதான் ஞானமென்றால் 
அஃது இன்னமும் 
உயிரோடுவேத்தான் இருக்கிறது 

நட்புடன்.....மு.முகமது பாட்சா* 

No comments:

Post a Comment

Popular Posts