Monday, 23 October 2017

முதுமை கிடையாது

தானியங்கு மாற்று உரை இல்லை.

முதுமையென்பது 
வலி கிடையாது, 

தொலைத்த உறவுகளை 
தேடுகின்ற பயணம் ! 

சுருக்கங்களை 
அனுபவங்களென்று 
நீங்கள் சொல்லிக் கொள்ளலாம், 
கவலைகளின் ரேகைகள் ! 

பார்வைக் குறைவும் 
குற்றமில்லை, 
தேவையில்லாத காட்சிகளை 
தவிர்த்துக் கொள்ளலாம் ! 

முதுமைக்கென்று 
கனவுகள் கிடையாது, 
ஏக்கங்களை மட்டுமே 
ஏந்திக் கொண்டு நிற்கும் ! 

மரணத்தைக் கண்டும் 
பயம் கிடையாது, 
மடியில் 
வைத்துக் கொண்டே திரியும் ! 

முதியோர் இல்லங்களின் 
கட்டில்களில் படுத்திருப்பது 
இயலாமை மட்டும் தான், 
முதுமை கிடையாது ! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts