Tuesday, 10 October 2017

காலி கோப்பைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பானம்

கோப்பைகள் 
எப்போதுமே வழிவதில்லை 
காலி கோப்பைகள் எப்போதும் 
அநாதிகளாகவே நிற்கின்றன, 
வழியும் கோப்பைகளிலெல்லாம் 
விடயங்களேதும் இருப்பதில்லை, 
விடம் நிறைந்த கோப்பைகளும் 
அரசியலின் 
அடுத்த வாரிசாய் வந்து நிற்கும், 
வரலாற்றுப் பிழைகளிலும் கூட 
கோப்பைகளுக்கு இடமுண்டு, 
ஞானக் கோப்பைகள் எப்போதுமே 
காலியாகத்தான் இருக்கின்றன, 
அதில் அவர்கள் 
பருகிக் கொண்டே இருக்கிறார்கள், 
கோப்பைகளை 
இடம் மாற்றி வைக்காதீர்கள் 
உதடுகள் 
கோபித்துக் கொள்ளக் கூடும், 
மதுக் கடை கோப்பைகள் எப்போதும் 
கவிழ்ந்துதான் கிடக்கின்றன அல்லது 
உடைந்து போகின்றன... 
கோப்பைகளின் தேநீர் 
இதமாகத்தான் இருக்கிறது... 
கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் 
இதுபோதும் இப்போது 
கோப்பைகள் மட்டும் 
எப்போதும் பத்திரமாக இருக்கட்டும். 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts