Thursday, 26 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 86

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கண்களுக்கான கண்ணாடிகள், குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

உனது அன்புக் கிண்ணத்தில்
என்ன கொண்டு வந்திருக்கிறாய்
நண்பா...விஷமா.? கொடு!
அருந்தும் போது என் உதட்டைப் பார்.
முணங்கும் ஒலி கேள்...
உன் பேர் உச்சரித்து விட்டு உதடு மூடினால் 
அப்போதும் நீ நண்பன்தான்
சீசருக்கு புரூட்டஸும் நண்பன்தான்..
ANTONy வந்து காட்டிக் கொடுக்காத வரை...
ஆயினும் முதல் கோப்பை உன்னது
என்பதில் பெருமை கொள்ளாதே.
கடைசி கோப்பை தருபவனுக்குதான்
வரலாற்றில் இடம்.
எப்போதும் கடைசி அம்புக்கும்
கடைசி ஆயுததிற்கும்தான்
கடவுளுக்கு இணையான வணக்கம் 
உண்டு.
புருட்டஸின் குறுவாளுக்குதான்
கீழ்ப் படிந்தது சீஸரின் ரத்தம்.
ரோமின் ஜனநாயகம் அவனால்தான்
காக்கப் பட்டதாக பெங்குவின்கள் சொல்லிக் கொண்டு போகின்றன
டைபர் நதிக் கரையில்.

கவிஞர் ஜெயதேவன்

No comments:

Post a Comment

Popular Posts