Thursday, 12 October 2017

இது என்ன அலைவரிசை

தானியங்கு மாற்று உரை இல்லை.

என் மௌனத்தை 
என்னோடுவே வைத்துக் கொண்டு திரிகிறேன்
உன் மௌனத்தை நீ
உன்னோடுவே வைத்துக் கொண்டு அலைகிறாய்
ஆனாலும்
இடையில் நாம் எப்படியோ பேசிக் கொள்கிறோம்
சலனங்களின் அலைகள்
நம்மிடையில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன
காற்றும் அறிவதில்லை
யாரோடு யாரைக் கடத்தி போகிறோமென்று
நிழல்களுக்கும் உயிர் இருக்கத்தானே செய்கிறது
நிஜங்கள் உயிருடன் இருக்கும் வரை
மௌனம் மௌனமாகவே இருக்கட்டும்
வா நாமிருவரும் பேசிக் கொள்வோம்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts