Sunday, 15 October 2017

மிகச் சிறந்த நவீனம்

தானியங்கு மாற்று உரை இல்லை.


' நவீனம் எழுதத் தாளை எடுத்தேன் ' 
எழுதுவது நவீனம்தான் என்றால் 
'நவீனம்' தேவையில்லை என்றார்கள், 

' எழுதத் தாளை எடுத்தேன் ' 

எழுதுவதற்குத்தான் தாள் 
தாளும் வேண்டாமென்று சொல்ல 

' தாளை எடுத்தேன் ' 

எடுத்தேன் நெருடுவதால் 
எடுத்தேனையும் எடுத்தேன் 
மிச்சமாய் நின்றது 

' தாள் ' 

இதையும் எடுத்துவிட்டால் 
மௌனத்தைச் சொன்ன 
 மிகச் சிறந்த  நவீனம் 
இதுவாகத்தான் இருக்கும்

- மு. முகமது பாட்சா*

No comments:

Post a Comment

Popular Posts