Monday, 23 October 2017

பட்டா நிலம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மேகம் மற்றும் வெளிப்புறம்

பட்டா போட்ட நிலத்தில்தான் 
கொட்டை போட்டு 
விவசாயம் செய்கிறான் 
கால் வயிற்றுக் கஞ்சிக்காரன் ! 

பன்னாட்டுப் பன்னாடையின் 
பத்து லட்ச ரூபாய் ஆசைக்கும் 
பணியவில்லை , 

அப்ரூவல் சரியில்லையென்று 
தாசில்தார் முத்திரை குத்துகிறார் ! 

கரம்பு நிலங்களில் 
விவசாயம் செய்யக் கூடாதாம், 
கிராமத்து அதிகாரி 
சட்டம் இயற்றுகிறார் ! 

ஆட்சியர் அலுவலகம் 
அவனை அலைக் கழிக்கிறது, 

கால்வயிறும் 
காணாமல் போனதால் 
முழம் கயிறு போதுமென்று 
முடிவெடுத்தான் ! 

அரசாங்கம் 
கொடுப்பதாகச் சொன்ன 
இரண்டு லட்சத்திற்கு 
அலைகிறாள் அவன் மனைவி ! 

அந்த நிலத்திற்கான 
இப்போதைய மதிப்பு , 
இரண்டு லட்சம்தானாம் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts